Subscribe:

ஞாயிறு, 6 மே, 2012

குழப்பங்கள்...


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்'' என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது'' என்று கூறுவான்.


ஆதாராம் : ஸஹீஹுல் புஹாரி

சனி, 5 மே, 2012

விசுவாசிகளே !


விசுவாசிகள் ஒட்டு மொத்தமாக (ஊரை விட்டு) புறப்பட்டுச் செல்லலாகாது;அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார், மார்க்கத்தை விளங்கிக் கொள்வதற்காகவும், இன்னும் அவர்களின் கூட்டத்தாரை அவர்கள் பால் திரும்பி விடும் பொழுது எச்சரிக்கை செய்வதற்காகவும் அவர்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டாமா? (அதன் மூலம்) அவர்கள் (தீயவைகளைத்) தவிர்த்துக் கொள்ளலாம்.


(19ம் அத்தியாயம் 122வது வசனம்)

ஆங்கில மொழி பெயர்ப்பு:

And it is not for the believers to go forth [to battle] all at once. For there should separate from every division of them a group [remaining] to obtain understanding in the religion and warn their people when they return to them that they might be cautious.

20 நாளில் – 20 மில்லியன் பயனர்கள்…. கலக்கும் கூகுள் ப்ளஸ்!!


இருபதே நாளில் 20 மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது கூகுள் ப்ளஸ். குறிப்பாக இந்தியாவில் மட்டும் 20 லட்சம் பேர் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்துள்ளனர்.

பேஸ்புக்குக்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது கூகுள் ப்ளஸ். சோதனை ஓட்டமாக அறிமுகமானபோதே பல லட்சம் பேர் இதனைப் பயன்படுத்த முனைந்ததால், சர்வர் திணறும் அளவுக்கு நிலைமை போனது.
இப்போது முழு வீச்சில் பயனர்களுக்கு கிடைக்கிறது கூகுள் ப்ளஸ். தினமும் பல லட்சக்கணக்கானோர் இந்த தளத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் வரையிலான 20 நாட்களில் உலகம் முழுக்க 20 மில்லியன் பயனர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்துள்ளனர்.
இவர்களில் 50.31 லட்சம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 20.85 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 8.7 லட்சமும், ஜெர்மனிகாரர்கல் 7.1 லட்சமும், பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் 5 லட்சம் பேரும் பயனர்களாக சேர்ந்துள்ளனர்.
கூகுள் ப்ளஸ்ஸில் பயனர்கள் சேரும் வேகத்தைப் பார்த்தால், அதிவிரைவில் உலகின் டாப் சமூக தளமாக அது வந்துவிடும் என காம்ஸ்கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போது ஒரு நாளைக்கு 7.63 லட்சம் பேர் கூகுள் ப்ளஸ்ஸில் இணைந்த வண்ணம் உள்ளார்கள். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 5 மாதங்களில் கூகுள் ப்ளஸ் 100 மில்லியன் பயனர்கள் எண்ணிக்கையைத் தாண்டிவிடும் என ஆன்செஸ்ட்ரி இணையதள நிறுவனர் பால் ஆலன் குறிப்பிட்டுள்ளார்.

எனது தேடல் உங்கள் அனைவருக்கும்...


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லஹி வபரகாதுஹு...
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்...
என்னுடைய இந்த புதிய இணைய வலைமனைக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஜஸாகல்லாஹு கைறன்! - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!